நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

'ஜெய் பீம்' படத்திற்குப் பிறகு சூர்யா நடித்து வரும் படம் 'வணங்கான்'. பாலா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முதல் கட்டத்துடன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு சூர்யாவின் 42வது படம் ஆரம்பமாகி உள்ளது. 'சிறுத்தை' சிவா இயக்கும் இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்று, இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் 39வது படத்தைத் தாங்கள் தயாரிக்கப் போவதாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் 2019ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி அறிவித்தது. ஆனால், அந்தப் படத்தை இயக்குவதை விட்டுவிட்டு ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தை இயக்கப் போய்விட்டார் சிவா. அதனால், சிவாவுக்குப் பதிலாக சூர்யாவின் 39வது படத்தை ஹரி இயக்குவார் எனவும் அந்தப் படத்திற்கு 'அருவா' எனப் பெயரிட்டுள்ளதாகவும் 2020ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி ஸ்டுடியோ க்ரீன் அறிவித்தது. ஆனால், அந்தப் படமும் நடக்காமல் டிராப் செய்யப்பட்டது. கடைசியில் சூர்யாவின் 39வது படமாக 'ஜெய் பீம்' படம் வெளிவந்தது.
அதன் பிறகு சமீபத்தில் சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணி இணையும் படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவமான யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் என அறிவிப்பு வெளிவந்தது. அந்தக் கூட்டணியை மூன்று வருடங்களுக்கு முன்பு அறிவித்த ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்காமல் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பதாக வந்த அறிவிப்பை திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சூர்யாவின் இந்த 42வது படத்தில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் கூட்டாக சேர்ந்து தயாரிக்க உள்ளதாம். இந்த வாரத்திற்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். இந்தப் படத்திற்குப் பிறகுதான் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள 'வாடிவாசல்' ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
கடந்த சில வருடங்களில் சூர்யாவின் படங்களின் ஆரம்பம், படப்பிடிப்பு, வெளியீடு ஆகியவை குறித்து குழப்பமான தகவல்கள் வெளிவருவது அவருடைய ரசிகர்களையும் சேர்த்து குழப்பி வருகிறது.