செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகை மவுனி ராய். சினிமா நடிகைதான் என்றாலும் இவர் நடித்த 'நாகினி' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்றவர். ரன், கே.ஜி.எப், லவ் செக்ஸ் அவுர் டாக்கா, வேதா உள்ளிட்ட சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.
அந்த வகையில் அடுத்து சிரஞ்சீவி நடித்து வரும் 'விஸ்வம்பரா' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். விரைவில் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற உள்ளது. தெலுங்கில் சமீபகாலமாக தெலுங்கு படங்களில் ஒரு பாடலுக்கு முன்னணி நடிகைகள் கவர்ச்சி நடனம் ஆடுவது அதிகரித்துள்ளது.
பாகுபலி படத்தில் நோரா பதேஹி ஆடினார். புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடினார். புஷ்பா 2வில் ஸ்ரீலீலா ஆடியிருந்தார். டாக்கு மகராஜா படத்தில் ஊர்வசி ரவுட்டேலா ஆடினார். ஒரு பாடலுக்கு ஆடும் முன்னணி நடிகைகளுக்கு கோடி கணக்கில் சம்பளமும் கொடுக்கப்படுகிறது.