செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் 'குட் வொய்ப்'. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட 'குட் வொய்ப்' என்ற தொடரின் தமிழ் வடிவம். பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை ரேவதி இயக்கியுள்ளார்.
இந்த தொடரின் அறிமுக நிகழ்வு நடந்தது. இதில் ரேவதி பேசும்போது "இதற்கு முன்பு படங்கள் இயக்கி இருந்தாலும் வெப் சீரிஸ் வாய்ப்பு வந்ததும் தயங்கினேன். ஏனெனில் படம் என்பது இரண்டு மணி நேரத்திற்குள் தொடக்கம் முடிவு என முடிந்துவிடும். ஆனால், வெப்சீரிஸ் அப்படி கிடையாது.
நான் எழுத்தாளர் இல்லை என்பதாலும் யோசித்தேன். இந்த கதை நம் தமிழ்நாட்டுக்கு தமிழ் பார்வையாளர்களுக்கு கொண்டுபோய் சேர்க்கக்கூடிய ஒன்றுதான். இதன் கதையை ஹலிதா மிக அற்புதமாக எழுதி இருந்தார். அதில் சில மாற்றங்கள் மட்டும் செய்துவிட்டு முழுக்க முழுக்க இயக்குநராக இந்த கதையை இயக்கி இருக்கிறேன்" என்றார்.