'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

ஓடிடி தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு புதிய படங்கள் நேரடியாக வெளியாவது நடந்தது. அதற்கடுத்து முன்னணி நடிகர்களை வைத்து சில வெப் சீரிஸ்கள் தயாராகி வெளிவந்தது. அதில் சில வெப் சீரிஸ்கள் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது.
தமிழில் 'பரியேறும் பெருமாள்' கதிர் நடித்த 'சுழல் 1, 2', அருண் விஜய் நடித்த 'தமிழ் ராக்கர்ஸ்', எஸ்ஜே சூர்யா நடித்த 'வதந்தி', விமல் நடித்த 'விலங்கு', அதர்வா நடித்த 'மத்தகம்', விக்ராந்த் நடித்த 'எல்பிடபுள்யூ' ஆகியவை இதற்கு முன் வெளிவந்த சில தொடர்கள். சமுத்திரக்கனி முதன் முறையாக நடித்த வெப் சீரிஸ் 'தடயம்' நேற்று வெளியானது.
இதற்கடுத்து விஜய் சேதுபதி நடித்துள்ள 'முத்து என்கிற காட்டான்', சசிகுமார் நடித்துள்ள 'வதந்தி 2', கதிர் நடித்துள்ள 'லிங்கம்' ஆகியவை வெளியாக உள்ளன. 'சதுரங்க வேட்டை' நட்டி ஒரு வெப்சீரிஸில் நடித்து வருகிறார். தமிழில் முன்னணியில் உள்ள சில ஓடிடி நிறுவனங்கள் அடுத்தடுத்து வெப் சீரிஸ்களை வெளியிட திட்டமிட்டுள்ளன.




