Advertisement

சிறப்புச்செய்திகள்

ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நடராஜ் வீட்டில் நடந்தது என்ன? புகழ் வெளியிட்ட வைரல் வீடியோ!

23 மார், 2022 - 10:19 IST
எழுத்தின் அளவு:
Pugazh---Natraj-video-goes-viral

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் நான்-பிக்சன் நடிகராக அறிமுகமானவர் புகழ். தற்போது வெள்ளித்திரையை ஒரு கை பார்த்துக்கொண்டிருக்கிறார். சினிமாவில் அறிமுகமான சில நாட்களிலேயே கிட்டத்தட்ட 5 படங்களில் காமெடியனாக நடித்து முடித்துள்ள புகழ், தற்போது புதிய படமொன்றில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். மிஸ்டர் ஸூ கீப்பர் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.

இதற்கிடையில் கிரிக்கெட் வீரரான நட்ராஜன், புகழின் தீவிர ரசிகர் ஆவார். அவர் புகழை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க, புகழும், நடராஜன் வீட்டுக்கு சென்று விருந்து சாப்பிட்டுள்ளார். அண்மையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தற்போது நடராஜன் வீட்டிற்கு சென்றது முதல் இருவருக்குமிடையே நடந்த உரையாடல்கள் வரை ஒரு சிறு வீடியோவாக எடிட் செய்து புகழ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதில் புகழ், 'ரொம்ப நாளாவே நம்ம நடராஜ் என்ன பாக்கணும் அண்ணான்னு கூப்டுட்டு இருக்கார். அவர் வீட்டுக்கு போயிட்டு இருக்கோம்' என்று சொல்கிறார். அதன் பின் பேசும் நடராஜ், 'எங்க வீட்டுல அப்பா தங்கராசு, அம்மா சாந்தா மூன்று தங்கைகள், அப்புறம் ஒரு தம்பி. நான் சாதிக்கிறதுக்கு முன்னாடி எனக்கு நிறைய தடைகள் வந்துச்சு. எங்க ஊர்ல இருந்து போறதுக்கு பஸ் கிடையாது. நல்ல துணி கிடையாது. எங்க வீட்ல பாத்ரூம் கூட கிடையாது. எனவே நான் பட்ட கஷ்டத்தை மற்ற இளைஞர்கள் படக்கூடாது' என கூறுகிறார். உள்ளூரில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி செய்ய அவரது சொந்த முயற்சியில் கிரிக்கெட் கிரவுண்ட் ஒன்றை ரெடி செய்து வருகிறார் எனவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலானதையடுத்து புகழ் மற்றும் நடராஜனுக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
+2 மாணவர்களே! என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வருங்கால கணவனுக்காக தியாகம் செய்த ஸ்ருதி சண்முகம்வருங்கால கணவனுக்காக தியாகம் செய்த ... ரோஷினி ஹரிப்ரியனின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்! ரோஷினி ஹரிப்ரியனின் லேட்டஸ்ட் வைரல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
23 மார், 2022 - 16:20 Report Abuse
KayD ஏற்கனவே பல முறை solli irukaen last election பிறகு natarajanai Raasa நீ team aa விட்டு நட ராசா nu solluvaanga nu.. So அவர் தான் காமெடி பீஸ் ஆகம இருக்க வெள்ளித்திரை காமெடி பீஸ் ஒன்னு onna nanbendaa nu meet pannitu irukaar. Appo சும்மா தான இருக்கார். புகழ் உம் irukum திறமை Ellathaium தலை weight baaram தாங்காம தான் வெளிய vara poraar...cwc la கூட இனி எடுபிடி thaan. புகழ் again solraen nitaya திறமை இருக்கு உன்னிடம் correct play panna right place la shining star as irupae இல்லைனா புகழ் மங்கி poiduum paathuko
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in