முடிவுக்கு வந்த 7 வருட கதை; வருத்தத்தில் ரசிகர்கள்! | விஜய்-67 ; தீவிர கதை விவாதத்தில் லோகேஷ் கனகராஜ் | டாலடிக்கும் ரத்தினமே - நயனை வர்ணிக்கும் விக்கி | ‛‛தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்'' - திரைப்பிரபலங்களின் சுதந்திர தின கொண்டாட்டம் | இணையத்தில் கசிந்த விஜய்யின் வாரிசு படக் காட்சி | இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' |
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மாவில் நடித்து புகழ் பெற்ற ரோஷினி ஹரிப்ரியன் முதலில் மாடலிங் துறையில் தான் காலடி எடுத்து வைத்தார். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்பதை தீம்மாக வைத்து ரோஷினி நடத்தியிருந்த போட்டோஷூட் அவரை மிகவும் பிரபலமாக்கியது.
சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்தில் சீரியல் வாய்ப்பு வரவே அதை பயன்படுத்திக் கொண்ட ரோஷினி கண்ணம்மா கதாபாத்திரத்தின் மூலம் கூடுதல் புகழை அடைந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் ரோஷினி மீண்டும் போட்டோஷூட்களில் இறங்கி அடித்து வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற மேலாடையில், குட்டையான வெள்ளை பாவடையுடன் அவர் வெளியிட்டிருக்கும் போட்டோஷூட் காண்பவர்கள் கண்களை பறித்து வருகிறது.
ரோஷினி ஹரிப்ரியன் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு அசத்தி வருகிறார்.