தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண் நடிப்பில் வெளியான படம் மாமன். தாய் மாமனுக்கும், அக்கா மகனுக்குமிடையிலான பாசத்தை மையமாக கொண்ட கதையில் உருவான இந்த படம் சூரிக்கு வெற்றி படமாக அமைந்தது. இதை அடுத்து தற்போது மண்டாடி என்ற படத்தில் மீனவராக நடிக்கிறார் சூரி. மதிமாறன் புகழேந்தி என்பவர் இயக்கி வருகிறார். சத்யராஜ், மகிமா நம்பியார், சுகாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த நிலையில் சூரி நடித்து மே 16ம் தேதி திரைக்கு வந்த மாமன் படம் விரைவில் ஜீ5 ஓடிடி தளம் மற்றும் ஜீ 5 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.