'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப்பணிகள் நடைபெறுகிறது. தற்போது பிரமோஷனும் தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் கூறுகையில், கூலி படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. நாங்கள் அவரை ரொம்பவே மிஸ் பண்ணி வருகிறோம். என்றாலும் இந்த படம் குறித்த சில தகவல்களை அவரிடத்தில் தெரிவிக்க அவ்வப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வருகிறேன். கூலி படத்தின் டப்பிங்கை பேசி முடித்துவிட்டு என்னை கட்டி அணைத்து பாராட்டினார் ரஜினி. இந்த படம் இன்னொரு தளபதி போல் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் சொன்ன இந்த வார்த்தை ஒட்டுமொத்த கூலி படக்குழுவுக்கும் எனர்ஜியை கொடுத்திருக்கிறது என்கிறார்.




