'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜூனாவின் இளைய மகன் அகிலின் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் நாகார்ஜூனாவிற்கு நாகசைதன்யா, அகில் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் நாகசைதன்யாவிற்கு, நடிகை சமந்தாவுடன் திருமணம் நடைபெற இருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இதனிடையே நாகார்ஜூனாவின் இளைய மகனான அகில், ஸ்ரியா பூபால் என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில் ஐதராபாத்தில் நேற்று அகில் - ஸ்ரியா பூபால் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்தது. இதில் இருவீட்டாரது குடும்பத்தார் மற்றும் சினிமா துறையில் உள்ள மிக முக்கியமான நட்சத்திரங்கள் மட்டும் கலந்து கொண்டனர். கூடவே சமந்தாவும் இந்த நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றார்.
அகில் - ஸ்ரியா திருமணம் இத்தாலியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் திருமண தேதி வெளியாகும் என தெரிகிறது.