பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
தெலுங்கு திரையுலகின் இளம் ஹீரோவும் நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யா, இந்த கொரோனா காலகட்டத்திற்கு பிறகு, மளமளவென, தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில், நடிக்க ஆரம்பித்துவிட்டார். அப்படி ஒரு படம் தான் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா டைரக்சனில் உருவாகி வரும் 'லவ் ஸ்டோரி'. இந்தப்படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.
சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஹாக்கி மட்டையுடன் ஸ்போர்ட்ஸ் உடையில் இருக்கும் நாகசைதன்யாவை பார்க்கும்போது, இந்தப்படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது என்றும் நாகசைதன்யா ஹாக்கி வீரராக நடிக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.