விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தமிழில் டி.ராஜேந்தர் இயக்கிய 'மைதிலி என்னை காதலி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அமலா. தொடர்ந்து 'வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, சத்யா, ஜீவா, மாப்பிள்ளை, வெற்றிவிழா, மௌனம் சம்மதம், கற்பூர முல்லை' என ஐந்தே வருடங்களில் பல வெற்றிப் படங்களிலும் முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார்.
தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள அமலா தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனாவுடன் நடிக்கும் போது காதல் வயப்பட்டு அவரை 1992ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார். அவர்களுக்கு அகில் என்ற ஒரே மகன் உள்ளார். தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக நடித்து வரும் அகில், ஒரு பெரிய வெற்றிக்காக இன்னும் காத்திருக்கிறார்.
அகிலுக்கும் ஜைனப் ரட்வ்ஜி என்பவருக்கும் நேற்று ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்பு இன்ஸ்டா தளத்தில் நெகிழ்ச்சியாக ஒரு பதிவிட்டுள்ளார் அமலா. “எனது அன்பு மகன் அகில் தனது அன்புக்குரிய ஜைனப்பை அதிகாலையில் (3.35) எங்கள் வீட்டில் நடந்த ஒரு நெருக்கமான விழாவில் திருமணம் செய்து கொண்டார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நாகார்ஜுனாவுக்கும் எனக்கும் இது கனவு நனவான ஒரு தருணம். நாங்கள் எங்களது அன்பையும், சிரிப்பையும், அரவணைப்பையும் எங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொண்டோம்.
ஒரு புதிய அத்தியாயத்தை ஒன்றாகத் தொடங்கும் போது உங்கள் ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துகளையும் நான் கோருகிறேன். அன்புடனும் நன்றியுடனும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.