கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா | சென்னை குற்ற சம்பவ பின்னணியில் உருவான 'சென்னை பைல்ஸ்' |
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி கடந்த வருடம் வெளியான படம் 'கல்கி 2898 ஏடி'. இந்தப் படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. படத்தின் இரண்டாம் பாகம் பிறகு வெளியாகும் என்று சொன்னார்கள்.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதமே ஆரம்பமாகும் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இதுவரை ஆரம்பமாகவில்லை. வருடக் கடைசியில்தான் ஆரம்பமாகி அடுத்த வருடம் இரண்டாம் பாகம் வெளியாகலாம் என்று ஒரு தகவல்.
இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோனே நடிக்கவில்லை, விலகிவிட்டார், நீக்கப்பட்டார் என கடந்த இரண்டு நாட்களாக பாலிவுட் மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்' படத்திலிருந்து தீபிகா விலகியதால் 'கல்கி 2' படத்திலிருந்தும் விலகுகிறார் என்றார்கள்.
ஆனால், இரண்டாம் பாகத்தின் 60 சதவீத படப்பிடிப்பை முதல் பாகம் எடுக்கும் போதே படமாக்கிவிட்டார்களாம். மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்புதான் நடக்க வேண்டி உள்ளதாம். தீபிகா இரண்டாம் பாகத்தில் இருக்கிறார், என படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.