பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

நடிகர் மம்முட்டி தான் நடித்து வரும் படம் ஒன்றிற்காக தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் அதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் இலங்கையில் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார் மம்முட்டி. இதுகுறித்த புகைப்படங்களை ஜெயசூர்யாவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
90களில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக, ரன் மெஷினாக வலம் வந்தவர் சனத் ஜெயசூர்யா. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த இவர், தற்போது இலங்கையின் சுற்றுலாத்துறை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் மிகவும் நெருக்கடியான சூழலிலும் இலங்கை சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஜெயசூர்யா. அதன் ஒரு பகுதியாக தான் ஜெயசூர்யா மம்முட்டி இருவரின் சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.
இதுபற்றி ஜெயசூர்யா கூறும்போது, “மூத்த மலையாள நடிகர் மம்முட்டியை சந்தித்ததில் பெருமைப்படுகிறேன். உண்மையிலேயே நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார்.. ஸ்ரீலங்காவிற்கு வருகை தந்ததற்கு நன்றி. இதேபோல அனைத்து இந்திய நட்சத்திரங்களையும் நண்பர்களையும் எங்களது நாட்டிற்கு சுற்றுலாவாக வந்து பார்வையிட வேண்டுமென அழைப்பு விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.