கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பாரன்சிக். முழுக்க முழுக்க தடயவியல் துறையை பின்னணியாக கொண்டு விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லர் படமாக உருவாக்கி இருந்த இந்த படத்தை அகில் பால் மற்றும் அனாஸ்கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கி இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது இதே கூட்டணி ஐடென்டிடி என்கிற படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு திரும்பியுள்ளார் மடோனா. பாரன்சிக் படத்தைப் போல இதுவும் திரில்லர் ஜானரில் தான் உருவாக இருக்கிறதாம்.