சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

கடந்த மாதத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதையடுத்து தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலும் தன்னுடைய அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டார். அவர்களுக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் ஒலித்தன.
இந்த நிலையில் மலையாள பிக்பாஸ் நடிகையாக ஜானகி சுதீர் தன்னுடைய அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இவர் நடித்து ஓடிடியில் வெளியான ஹோலி ஊண்டு என்ற மலையாள படத்தில் ஒரு லெஸ்பியன் கன்னியாஸ்திரி வேடத்தில் இவர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு தற்போது எதிர்ப்புக் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த பரபரப்புக்கு நடுவே மேலாடை எதுவும் இன்றி நகைகளை தனது மேலாடையாக அணிந்தபடி அரை நிர்வாண போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஜானகி. ஏற்கனவே லெஸ்பியன் படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் உடனடியாக இப்படி அரை நிர்வாண புகைப்படங்களை அவர் வெளியிட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.