அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு | ஆஸ்கர் நினைவஞ்சலி ஏற்படுத்திய சர்ச்சை |

மலையாள திரையுலகில் ஒரு சாதாரண நகைச்சுவை நடிகராக நுழைந்து பின் படிப்படியாக குணச்சித்திர நடிகராக மாறி தற்போது தனது வயதான காலத்தில் கதையின் நாயகனாக ஒரு படத்தையே தாங்கி நிற்கும் அளவிற்கு வளர்ந்துள்ளவர் மலையாள நடிகர் இந்திரன்ஸ். தமிழில் ஷங்கர் இயக்கிய 'நண்பன்' என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளார்.
சமீப காலமாக காமெடி கலந்த மற்றும் தனித்துவமாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் இந்திரன்ஸ். அந்த வகையில் தற்போது அவர் நடித்துள்ள படம் ஆசான். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் மம்முட்டி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் மம்முட்டி மேடை ஏறி பேசியபோது கீழே அமர்ந்திருந்த நடிகர் இந்திரன்ஸையும் மேலே வரவழைத்து தன் அருகில் நிற்க வைத்து, “ஒரு காலத்தில் இந்திரன்ஸ் என்றாலே அவரை வைத்து உருவ கேலி செய்து தான் பல படங்கள் வெளியாகின. ஆனால் இன்று அவரது நடிப்பால் அவர் மற்றவர்களை கேலி செய்யும் அளவிற்கு மிகப்பெரிய உயரத்திற்கு வந்துவிட்டார். அவரிடம் என்னென்ன விஷயங்களை நெகட்டிவாக குறிப்பிட்டார்களோ அதை எல்லாமே பாசிட்டிவாக மாற்றிக்கொண்டு மிகச் சிறந்த நடிகராக மாறிவிட்டார்.. அவர் நடித்த ஜலதார பம்பு செட் மற்றும் குட்டன்டே சினிகாமி படங்களை பார்த்திருப்பீர்களா என்று தெரியாது. நான் பார்த்து அவ்வளவு பிரமித்து போய் விட்டேன்” என்று பாராட்ட அருகில் இருந்த இந்திரன்ஸ், அதைக்கேட்டு அப்படியே நெகிழ்ந்து போய்விட்டார்.