பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி |

நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவருக்கு, உபாசனா என்ற பெண்ணுடன் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2023ம் ஆண்டு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'கிளின் காரா' என்று பெயர் வைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் மீண்டும் உபாசனா கர்ப்பமாக இருந்த நிலையில் நேற்று அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அதையடுத்து தான் இரண்டாவது முறை தாத்தாவான தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ராம்சரண், உபாசனாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும், பிள்ளைகளும் நலமாக உள்ளார்கள். இந்த குழந்தைகளை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் தாத்தா பாட்டிகளாக நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் பிள்ளைகளுக்கு வாழ்த்து மற்றும் ஆசீர்வாதங்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்' என்று கூறியுள்ள சிரஞ்சீவி, ராம்சரண், உபாசனா தம்பதியருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.