வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

பிரபல மலையாள குணச்சித்திர நடிகரும் கதாசிரியருமான சீனிவாசன் கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மகன்கள் வினித் சீனிவாசன் மற்றும் தியான் சீனிவாசன் இருவருமே மலையாள சினிமாவில் இயக்குனர்களாகவும் நடிகர்களாகவும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சீனிவாசன் மறைந்து 40வது நினவு தினத்தில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு தங்களது குடும்பத்துடன் வருகை தந்தனர். அங்கு இருந்த ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பேசி அவர்களை மகிழ்வித்தனர். அது மட்டுமல்ல அங்கு இருந்து அனைவருக்கும் மதிய உணவும் விருந்தளித்தனர்.
நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாகவே இருக்கும் மேரி அம்மா என்பவர் வினித் சீனிவாசனை அடையாளம் கண்டுகொண்டு, “நீ தான் நன்றாக பாடுவாயே.. எனக்காக ஒரு பாட்டு பாட மாட்டாயா ?” என்று கேட்டார். உடனே அடுத்த நொடி யோசிக்காமல் தான் பாடிய பாடல்களில் இரண்டு பாடல்களை அடுத்தடுத்து பாடி அந்த வயதான பெண்மணி ஆசையை நிறைவேற்றினார். வினித் சீனிவாசன். இவர்களது இந்த ஆதரவற்றோர் இல்ல விசிட் ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.




