வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் எப்போதுமே தென்னிந்திய படங்கள் மீது, குறிப்பாக தமிழ் படங்கள் மீது தொடர்ந்து கவனம் செலுத்தி நல்ல படங்களை மனம் திறந்து பாராட்டியும் வருகிறார். அது மட்டுமல்ல தமிழில் 'இமைக்கா நொடிகள், மகாராஜா' ஆகிய படங்களிலும் மிகச்சிறந்த வில்லன் நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார்.
இதைத் தொடர்ந்து தெலுங்கில் ஆத்வி சேஷ், மிருனாள் தாக்கூர் இணைந்து நடித்துள்ள 'டகாய்ட்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் அடி எடுத்து வைத்துள்ளார். அனுராக் காஷ்யப். அந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் அடுத்ததாக பாபி கொல்லி டைரக்ஷனில் சிரஞ்சீவி நடிக்கும் 158வது படத்திலும் அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் தெலுங்கு திரையுலகில் தற்போது பேசப்பட்டு வருகிறது.




