68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு |
ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்துள்ள படம் ஜீரோ. குள்ளமான உயரம் கொண்டவராக அவர் நடித்துள்ள இந்த படத்தில் அனுஷ்கா சர்மா, கைத்ரினா கைப் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 21-ந்தேதி வெளியாகிறது.
இந்நிலையில், இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் தற்போது தீவிரமடைந்துள்ள ஷாரூக்கான் ஐதராபாத்தில் நேற்று நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது டோலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டார் நடிகரான அல்லு அர்ஜூன் தன்னை மிகவும் கவர்ந்த நடிகர் என்று கூறினார்.
அதோடு, மிகவும் இனிமையானவரான அவர் திறமை வாய்ந்தவராக இருக்கிறார். ஒருமுறை ஐதராபாத் வந்து அவருடன் ஒரு நாள் முழுக்க கழிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் ஷாரூக்கான்.