நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

உருட்டு உருட்டு என்ற படத்தில் நாகேஷின் பேரன், அதாவது நடிகர் ஆனந்த் பாபு மகன் கஜேஷ் ஹீரோவாக நடிக்கிறார். பாஸ்கர் சதாசிவம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மூணு பெண்டாட்டி முனுசாமியாக நடிக்கிறார் காமெடி நடிகர் மொட்ட ராஜேந்திரன். கதைப்படி அவருக்கு 3 கவர்ச்சி நடிகைகள் ஹீரோயின். அவர்களுடன் ஒரே வீட்டில் வாழ்வதாக சீன்கள் நகர்கிறதாம். அது மட்டுமல்ல, மொட்ட ராஜேந்திரனுக்கும், அந்த 3 ஹீரோயின்களுக்கும் இடையே படு கவர்ச்சியாக ஒரு பாடலும் இடம் பெற்று இருக்கிறது. அந்த பாடலில் 3 ஹீரோயின்களுடன் 68 வயதை தாண்டிய நிலையில் ஆடியிருக்கிறார் மொட்ட ராஜேந்திரன்.
இதில் முதல்வன் உப்பு கருவாடு பாடல் ஸ்டைலும் உண்டு. சென்னையில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவுக்கு அந்த 3 நடிகைகள் வந்தநிலையில், வெட்கப்பட்டு மொட்ட ராஜேந்திரன் மட்டும் வரவில்லை. மகன் கஜேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் என்பதால், ஆனந்த பாபு கலந்து கொண்டு பேசி இருக்கிறார். அந்த 3 ஹீரோயின்களில் மஸ்காரா பாடல் புகழ் அஸ்மிதாவும் ஒருவர். இந்த வயதில் இப்படிப்பட்ட சான்ஸ் யாருக்கும் கிடைக்காது, உண்மையில் மொட்ட ராஜேந்திரன் இந்த படத்துக்கு சம்பளமே வாங்கி இருக்க கூடாது என்று பலரும் அவரை கலாய்த்து வருகிறார்கள்.