நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மறைந்த ராம.நாராயணன் இயக்கத்தில் சீதா நடிப்பில் 1990ம் ஆண்டு வெளியாக பெரிய வெற்றி பெற்ற படம் ஆடி வெள்ளி. அந்த படத்தின் சென்டிமென்ட் காட்சிகளும், பாம்பு, யானை சீன்களும் தமிழகத்தில் பேசப்பட்டன. இந்த படத்தை ரீமேக் செய்ய முயற்சிக்கிறார் ராம நாராயணன் மகன் முரளி ராமசாமி. சீதா வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. அதில் 15 கோடி வரை சம்பளம் கேட்டதாலும், மூக்குத்திஅம்மன் 2 படத்தில் பிஸி ஆனதாலும் அவரை நடிக்க வைக்கவில்லை.
இப்போது திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அம்மன் கதையில் நடிக்க வேண்டும் என அவரும் ஆர்வமாக இருக்கிறாராம். இயக்குனர் தேர்வும் நடந்து வருகிறது. திரிஷா ஓகே சொல்லும் பட்சத்தில் வரும் ஆடி வெள்ளியில் இந்த பட அறிவிப்பு வெளியாக வாய்ப்பு. மூக்குத்தி அம்மன் 2வில் திரிஷாவை நடிக்க வைக்க முயற்சித்தார் ஆர்.ஜே.பாலாஜி. ஆனால், அது நடக்கவில்லை. கடைசியில் அந்த படம் சுந்தர்.சி இயக்க, நயன்தாரா நடிப்பில் தயாராகிறது. ஆகவே, இந்த பட வாய்ப்பை விட்டு விடக்கூடாது. நயன்தாரா மாதிரி தானும் பக்தி படத்தில் நடிக்கவே வேண்டும் என்று திரிஷா விரும்புகிறாராம். ஆடி வெள்ளி ரீமேக்கிலும் யானை முக்கியமான பாத்திரத்தில் நடிக்க உள்ளதாம்.