விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் தெலுங்குத் திரையுலகினருக்காக 'நந்தி விருதுகள்' வழஙகப்பட்டு வந்தது. ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலமாகப் பிரிந்த பிறகு விருதுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கானா அரசு 'கட்டார்' விருதுகள் என தெலுங்குத் திரையுலகத்தினருக்காக புதிய பெயரில் விருதுகளை வழங்குவதாக அறிவித்து, சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்ட பல விருதுகளை அறிவித்தார்கள். நேற்று அந்த விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் விழாவில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றார்கள். 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசலில் ஒரு பெண் உயரிழந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனையும் கைது செய்தது தெலுங்கானா அரசு. அதனால், இந்த விழாவில் அல்லு அர்ஜுன் கலந்து கொள்வாரா என்ற ஒரு சந்தேகம் நிலவியது.
அதையெல்லாம் பொருட்படுத்தால் அல்லு அர்ஜுன் நேற்று நேரில் வந்து விருது பெற்றது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா, முதல்வர் ரேவந்த் ரெட்டி அடுத்தடுத்து அமர்ந்திருந்ததும் பேசப்பட்டது.




