இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
பாலிவுட்டில் வாரிசு நடிகைகளில முக்கியமானவர் ஆல்யா பட். ‛ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானார். இவரிடம் 2021 முதல் 2024 வரை பர்சனல் செகரட்டரி ஆக பணிபுரிந்த வேதிகா ஷெட்டி என்பவர் 77 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டார் என்கிற புகாரின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதமே இவர் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் தான் ஆலியா பட்டுக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக செலவு கணக்குகளில் பணத்தை கையாடல் செய்து ஆலியா பட்டின் கையெழுத்தையும் முறைகேடாக பயன்படுத்தி இந்த பணத்தை எல்லாம் தனது நண்பர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு செல்லுமாறு மாற்றி அதன்பிறகு தனது வங்கி கணக்கிற்கு அதை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளார் வேதிகா ஷெட்டி.
இந்த மோசடியை ஆலியா பட்டின் தாய் சோனி ரஸ்தான் கண்டுபிடித்து மும்பை ஜூஹு போலீஸில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்திருந்தார். ஆனால் இதைத் தொடர்ந்து தலைமறைவான வேதிகா அதன்பிறகு ராஜஸ்தான், கர்நாடகா, அங்கிருந்து புனே இறுதியாக பெங்களூரு சென்று மாறி மாறி போலீசாரை அலைக்கழித்தார், ஒரு வழியாக தற்போது பெங்களூரில் அவர் இருப்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.
இதற்கு முன்னதாக இவர் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவிடம் இரண்டு வருடங்கள் உதவியாளராக பணிபுரிந்த போதும் இப்படி மோசடி செய்து பணம் கையாடல் செய்துள்ளார் என்று இவரது இந்த கைது நடவடிக்கைக்கு பின்பு ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவின் தாயார் மீரா ரவுட்டேலா.