சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி, நல்லதம்பி நாடகங்கள் திரைப்படமாகி இருந்த நிலையில் அவர் எழுதி கே.ஆர்.ராமசாமி நடத்தி வந்த 'ஓர் இரவு 'நடாகத்தை திரைப்படமாக்க விரும்பினார் ஏவி.மெய்யப்ப செட்டியார்.
ஒரே இரவில் நடப்பது மாதிரியான இந்த கதையில் கதையின் சில சம்பவங்கள் பிளாஷ்பேக் முறையில் சொல்லப்பட்டிருக்கும். நாடகமாக நடித்து வரப்பட்ட இதனை சினிமாவுக்கான திரைக்கதையாக மாற்ற வேண்டும். அந்த பொறுப்பும் அண்ணாதுரைக்கு கொடுக்கப்பட்டது.
ஏவி.எம்.ஸ்டூடியோவுக்கு அண்ணாதுரை வந்தார். அவருக்கு ஒரு அறை ஒதுக்கித் தரப்பட்டது. இரவு டிபன் சாப்பிட்டதும், அண்ணா திரைக்கதை, வசனம் எழுதத் தொடங்கினார். இரவு சுமார் 10 மணிக்கு எழுதத் தொடங்கியவர், விடிய விடிய எழுதினார். அடித்தல், திருத்தல் இல்லாமல் மொத்தம் 300 பக்கங்களில் திரைக்கதை வசனத்தை எழுதி முடித்தார்.
இதற்காக அண்ணாதுரைக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. இன்றைய மதிப்பில் அது பல கோடிகள். அந்த வகைவில் அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் அண்ணாதுரை தான்.
படத்தில், டி.கே.சண்முகம் நடித்தார். அவருக்கு ஜோடி பி.எஸ்.சரோஜா. இளம் ஜோடியாக ஏ.நாகேஸ்வரராவ் - லலிதா நடித்தனர். நாடகத்தில் நடித்த வேடத்தில் கே.ஆர். ராமசாமி நடித்தார். ஏவி.எம்.மின் துணை டைரக்டராக இருந்து வந்த ப.நீலகண்டன், இப்படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். நாடகம் வெற்றி பெற்ற அளவிற்கு திரைப்படம் வெற்றி பெறவில்லை.
அதோடு இந்த படத்தின் கதையை அண்ணாதுரை ஒரே இரவில் எழுதினார் என்பது தவறான தகவல். ஏற்கெனவே எழுதி நாடகமாக நடத்தப்பட்டு வந்த கதைக்கு திரைக்கதை வடிவம் கொடுத்து வசனம் எழுதியதுதான் ஒரே இரவில்.