சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
1985ம் ஆண்டு வெளியான படம் 'சின்ன வீடு'. சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கோர்வையான, கச்சிதமான திரைக்கதையை தன்னுடைய பாணியில் எழுதி, இயக்கி இருந்தார் கே. பாக்யராஜ்.
பொருந்தாத மனைவியை வெறுத்து இன்னொரு பெண்ணை தேடும் ஒரு ஆணின் கதை இது. கோவலன் கண்ணகி கதையின் உல்டா என்றும் சொல்லலாம். தன்னுடைய வருங்கால மனைவி, அழகுப் பதுமையாக இருக்க வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் பாக்யராஜிற்கு குண்டாக இருக்கும் கல்பனாவை திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.
மனைவியை ஒதுக்கி வைத்து வேண்டா வெறுப்பாக குடும்பம் நடத்தும் பாக்யராஜ், பானு என்கிற ஓர் அழகான பெண்ணின் காதலில் விழுகிறார். இதனால் ஏற்படும் உறவுச்சிக்கல்களும், குழப்பங்களும் இறுதியில் எவ்வாறு தீர்கின்றன என்பதை நிறைய காமெடியும் கொஞ்சம் சென்டிமென்ட்டும் கலந்து சொல்லிய படம்.
கிட்டத்தட்ட இதே மாதிரியான கதையை கொண்ட 'கோபுரங்கள் சாய்வதில்லை' படம் இரு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி இருந்தது. மனைவியாக வந்த அருக்காணியை (சுஹாசினி) கைவிட்டு மார்டன் பெண்ணான ராதாவோடு மோகன் சுற்றும் கதை.
இந்த படம் மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததால் 'சின்ன வீ'டு படத்தை இப்போதே ரிலீஸ் செய்தால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கருதிய பாக்யராஜ் படம் தயாராகி 6 மாதங்களுக்கு பிறகு படத்தை வெளியிட்டார்.