சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் ஷாகிர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கூலி'.
இப்படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்ற தகவல் வெளியானதிலிருந்தே ரசிகர்கள் ஒரு ஆர்வத்துடன் இருந்தார்கள். 'ஜெயிலர்' படத்தில் தமன்னா நடனமாடியதை விடவும் பூஜாவின் நடனம் அசத்தலாக இருக்கும், அந்தப் பாடலை இந்தப் பாடல் 'பீட்' செய்யும் என்றெல்லாம் எதிர்பார்த்தார்கள்.
நேற்று வெளியான அந்தப் பாடலான 'மோனிகா' உடனடியாக ஹிட் ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். யு டியூபில் அதற்குள் 4 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. நடன இயக்குனர் சாண்டி அமைத்துள்ள நடனத்தில் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்கள் நடனமாடியுள்ளனர். துறைமுகத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்பாடல் பிரம்மாண்டமாகவே உள்ளது.
சிவப்பு நிற ஆடையில் பூஜா ஹெக்டே கவர்ந்திழுத்தாலும், மறு பக்கம் தனது அசத்தலான நடனத்தால் சவுபின் ஷாகிர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 'மஞ்சுமேல் பாய்ஸ்' படத்தில் நடித்த சவுபின் இவ்வளவு சிறப்பாக நடனமாடுவாரா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
இப்பாடலுக்காக பூஜாவுக்கு சில கோடிகள் சம்பளமாகக் கொடுத்திருக்கலாம். இருந்தாலும் பின்னால் கூடவே ஆடிய சவுபின் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பேச வைத்துவிட்டார்.