நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

எலைட் டாக்கீஸ் சார்பில் கே.பாஸ்கரன் தயாரிக்கும் படம் 'பேட்டில்'. நாராயணன் இயக்குகிறார். இவர் சமீபத்தில் வெளியான 'தண்டகாரண்யம்' படத்தின் உதவி எழுத்தாளராகவும் இயக்குநர் சக்திவேலிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர்.
அர்ஜுன், ஆராத்யா நடிக்கும் இந்த படத்தில் இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா, சரவண சுப்பையா மற்றும் முனீஷ்காந்த் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 'இட்லி கடை' படத்தில் சிறு வயது தனுஷ் பாத்திரத்தில் நடித்த திஹான் மற்றும் திவ்ய ஸ்ரீ உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். செழியனின் உதவியாளரான யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜீவா இசை அமைக்கிறார்.
படம் குறித்து பேசிய இயக்குநர் நாராயணன், "ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை முழுக்க காட்டும் முதல் தமிழ் படம் இதுவென்று நினைக்கிறேன். ராப் பாடகர்கள் ஒன்று கூடும் இடத்தில் 'பேட்டில்' என்ற நிகழ்வு நடைபெறும். அதை குறிக்கும் வகையிலும், நாயகன் எதிர்கொள்ளும் போராட்டங்களை விளக்கும் வகையிலும் இப்படத்திற்கு 'பேட்டில்' என்று பெயர் வைத்துள்ளோம்" என்கிறார்.