தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. தென்னிந்திய சினிமா தாண்டி ஹிந்தியிலும் அசத்தி வருகிறார். இவர் கர்நாடக மாநிலம், கூர்க் பகுதியில் வாழும் கொடவா சமூகத்தை சேர்ந்தவர். சமீபத்திய ஒரு பேட்டியில், ‛‛இந்த சமூகத்தில் இருந்து வந்த முதல் நடிகை நான்தான்'' என்று கூறியிருந்தார் ராஷ்மிகா. இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொடவா சமூகத்தில் இருந்து இதற்கு முன்பு பல நடிகைகள் திரைத்துறைக்கு வந்துள்ளனர். குறிப்பாக 90களின் இறுதியில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை பிரேமா அந்த சமூகத்தை சேர்ந்தவர் தான் என்பதை குறிப்பிட்டு ராஷ்மிகாவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள பிரேமா, "நான்கூட கொடவா சமூகத்தின் முதல் நடிகை அல்ல. நான் நடிக்க வருவதற்கு முன்பே இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக நடிகை சசிகலா எனக்கு முன்பே சினிமாவிற்குள் வந்துவிட்டார். அதன் பிறகுதான் நான் சினிமாவிற்கு வந்தேன். தற்போதும் நிறைய கொடவா சமூகத்தினர் சினிமாவின் பல பிரிவுகளில் இருக்கிறார்கள். நடிகர், நடிகைகளாகவும் இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.