கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
சென்னை: ''அனுபவசாலிகள் இல்லை என்று சொன்னால் எந்த இயக்கமும், எந்த கட்சியும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமல்ல, சிகரங்களும் கூட,'' என்று சென்னையில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
சென்னையில் நடந்த வேள்பாரி புத்தக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: பல மாதங்களுக்கு முன்பு கலைவாணர் அரங்கில் எ.வ.வேலு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வந்திருந்தனர். எல்லோரும் நண்பர்கள் தான். அப்போது நான் பேசும்போது, நான், ‛ஓல்டு ஸ்டூடண்டை சமாளிப்பது கடினம். அதெல்லாம் ரொம்ப கஷ்டம். அவர்கள் வகுப்பறையைவிட்டு செல்லமாட்டார்கள்' என்று கூறியிருந்தேன்.
அதே சமயம், 'அப்படியிருந்தாலும் ஓல்டு ஸ்டுடன்ட் தான் தூண்கள். அவர்கள் தான் பவுண்டேஷன். அனுபவசாலிகள் இல்லை என்று சொன்னால் எந்த இயக்கமும், எந்த கட்சியும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமல்ல, சிகரங்களும் கூட, என்றும் சொல்லலாம் என வந்துவிட்டு எல்லாரும் சிரித்ததில் நான் அதை சொல்ல மறந்து விட்டேன். இப்போது வரும்போது மனதில் மிஸ்டர் ரஜினிகாந்த் அந்த மாதிரி ஏதும் மிஸ்டேக் பண்ணி விடாதே, என நினைத்தேன். சரியாக பேச வேண்டும் என நினைத்தேன்.
புத்தகம் படிக்கணும்
1996ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தார். இரண்டு, மூன்று முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பேசும்போது மஹாராஷ்டிராவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி இருக்கேன். பத்து மாடு இருக்கிறது. அங்கு நிறைய புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கிறேன். புத்தகங்களை படித்து விட்டு அங்கே இருக்க வேண்டும் என்பது ஆசை என்றார்.
அரசியலை, விட அவர் சொன்ன அந்த விஷயம் மண்டைக்குள் ஏறிடுச்சு. 1996ல் இருந்து நல்ல புத்தகங்கள் கிடைத்தால், ஓய்வுக்கு பிறகு, அந்த மாதிரி ஒரு இடத்தில் இருந்து நல்லா படிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதனால், புத்தகங்களை படிக்கலாம் என்று எடுத்து வைத்திருக்கிறேன்.
வணங்குகிறேன்
கலை எந்த வடிவில் இருந்தாலும் சரி, அதை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள். ஜாதி, மதம், பேதம், மொழி எதையும் பார்க்க மாட்டார்கள். தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். HATS OFF, உங்க காலில் விழுந்து வணங்குகிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.