நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு முழுமையான சூப்பர் ஹீரோ படமாக அறியப்படுவது ஹிருத்திக் ரோஷன் நடித்த 'க்ரிஷ்' படம் தான். தற்போது இதன் நான்காம் பாகமாக க்ரிஷ்-4ஐ உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் கிரிஷ் படங்களின் இயக்குனரும், ஹிருத்திக் ரோஷனின் தந்தையுமான ராகேஷ் ரோஷன்.
முந்தைய இரண்டு பாகங்களிலும் டாக்டர் ரோஹித் மற்றும் க்ரிஷ் என தந்தை மகனாக இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் ஹிருத்திக் ரோஷன்.. இந்த மூன்றாவது பாகத்தில் தந்தை, மகன் மட்டுமல்லாது, கூடுதல் பொறுப்பாக சூப்பர் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறாராம் ஹிருத்திக் ரோஷன். இந்தப்படத்தின் நாயகியும் ஹிருத்திக் ரோஷனுக்கு உதவியாக சூப்பர் பவர் கொண்டவராக நடிக்க இருக்கிறாராம்.