நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர்.. 27.7 மில்லியன் பேர் டுவிட்டரிலும், 52.5 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமிலும் அவரை பின் தொடர்கின்றனர். இந்தநிலையில் தற்போது தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இதுவரை தான் பதிவிட்டு வந்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை அனைத்தையும் அதிரடியாக நீக்கியுள்ளார் தீபிகா படுகோனே.
முதலில் தீபிகாவின் சோஷியல் மீடியா கணக்குகளை யாரோ ஹேக் செய்துவிட்டனரோ என்றுதான் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் ஆடியோ குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ள தீபிகா படுகோனே, தானேதான் அவற்றை அழித்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஆடியோ குறிப்பில், “எல்லோருக்கும் வணக்கம்.. என்னுடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் பதிவு செய்துள்ள என்னுடைய ஆடியோ டைரிக்கு உங்களை வரவேற்கிறேன். என்னுடைய இந்த செயலை நீங்கள் அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.. 2020ஆம் வருடம் அனைவருக்கும் நிலையில்லாத வருடமாக இருந்தாலும் .என்னை பொறுத்தவரை நன்றி மிகுந்ததாகவும் எனது இருப்பை வெளிப்படுத்த உதவுவதாகவும் அமைந்தது” என கூறியுள்ளார். ஆனாலும் தனது மொத்த பதிவுகளையும் நீக்கியதற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.