மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையமைப்பில் மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி மற்றும் பலர் நடித்து 2017ம் ஆண்டு வெளிவந்து நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்ற படம் 'விக்ரம் வேதா'.
இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கப் போவதாக ஆமீர்கான் உள்ளிட்டவர்களின் பெயர்கள் கூட அடிபட்டது. யார் நடிப்பார்கள் என அடிக்கடி செய்திகள் வருவதும், பிறகு இல்லை என்பதும் வழக்கமாகவே இருந்தது.
இப்போது இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன், சைப் அலிகான் நடிக்கப் போவதாக மீண்டும் செய்திகள் வந்துள்ளன. இந்த முறையாவது இந்த செய்தி உண்மையாகுமா அல்லது வழக்கம் போல மாற்றங்கள் வருமா என்பது விரைவில் தெரிய வரும். 2022 செப்டம்பர் மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
'விக்ரம் வேதா' படத்திற்குப் பிறகு புஷ்கர் - காயத்ரி கடந்த 4 வருடங்களாக வேறு எந்த படத்தையும் இயக்காமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.