மாதவனின் டெஸ்ட் போட்டி ரசிகர்களை ஈர்க்குமா? | ஒரு வருடத்திற்குப் பிறகு ஓடிடியில் 'லால் சலாம்' | திரையரங்கை தொடர்ந்து ஓ.டி.டி.,க்கு வரும் பெருசு | குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா | சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஏற்கனவே கார் விபத்து வழக்கு, மான்கறி வழக்கு என பல சர்ச்சைகளில் சிக்கியவர். இந்தநிலையில் மோசடி வழக்கு ஒன்றிற்காக சல்மான்கான் மற்றும் அவரது தங்கை உள்ளிட்ட ஏழு பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது சண்டிகர் போலீஸ். சண்டிகரை சேர்ந்த அருண் குப்தா என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விஷயம் இதுதான்.. சல்மான்கான் 'பீயிங் ஹ்யூமன்' என்கிற அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார் சில மாதங்களுக்கு முன்பு, இந்த அறக்கட்டளையை சேர்ந்த இருவர் அருண் குப்தாவை தொடர்பு கொண்டு, இந்த அறக்கட்டளையின் கிளை ஒன்றை ஆரம்பித்து அதன்மூலம் புதிய வியாபாரம் துவங்குங்கள் என்றும் அதை சல்மான்கான் வந்து திறந்து வைப்பார் என்றும் கூறினார்களாம்.
அவர்கள் பேச்சை நம்பி பீயிங் ஹ்யூமன் ஜுவல்லரி என்கிற பெயரில் கடையை துவங்குவதற்காக சுமார் மூன்று கோடி ரூபாய் வரை முதலீடு செய்தாராம் அருண் குப்தா.. ஆனால் அவர்கள் சொன்னபடி சல்மான்கான் வந்து கடையை திறந்து வைக்கவில்லை, அதனால் எனக்கு நஷ்டமானது என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார் அருண் குப்தா.