
அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் ராவணம்
இந்த படத்திற்குப் பிறகு "கேஜிஎப், சலார்" படங்களின் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த தகவலை படத்தைத் தயாரிக்க உள்ள தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருக்கிறார். அல்லு அர்ஜுன், பிரசாந்த் நீல் இருவரும் தற்போதுள்ள படங்களை முடித்த பிறகு இந்த "ராவணம்" படம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
ராமாயணத்தின் வில்லன் கதாபாத்திரமான ராவணன் கதையை மாற்றி "பேன்டஸி" வகையில் இந்தப் படத்தைக் கொடுக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ராமாயணத்தைத் தழுவித்தான் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்க 2010ல் "ராவணன்" படம் வெளிவந்தது.
"ராவணம்" படத்தை அதிக பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!