நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் எனப் பட்டியல் போட்டால் அது தொடரும் ஒன்றாகவே இருக்கும். தற்போது அடுத்த வாரிசு நடிகராக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாளை(ஜூன் 4) வெளியாக உள்ள 'பீனிக்ஸ் வீழான்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு சிறுவனாக சில படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகனாக நடிப்பதுதான் முக்கியமானது.
படம் வெளிவருவதற்கு முன்பே அவர் இப்படத்திற்காக நடந்த புரமோஷன் நிகழ்வுகளில் பேசியது, நடந்து கொண்ட விதம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக 'டிரோல்' செய்யப்பட்டது. எதற்காக இவ்வளவு 'டிரோல்' என்பது பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. வேறு எந்த ஒரு வாரிசு நடிகருக்கும் இப்படி நடந்ததில்லை என்று விஜய் சேதுபதி ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.
படம் வெளியாகும் இரண்டு நாட்களுக்கு முன்பு நேற்றே இப்படத்தின் பிரிமீயர் காட்சி நடைபெற்றது. படத்தைப் பார்த்த பலரும் பாராட்டியுள்ளனர். கதாபாத்திரத்திற்கேற்றபடி சூர்யா சேதுபதி நடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். படம் வெளிவந்த பின் அவரை 'டிரோல்' செய்தவர்களே பாராட்டுவார்கள் என தியேட்டரை விட்டு வெளியில் வந்தவர்கள் பேசிக் கொண்டார்களாம்.