அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் 'காட்டி' தள்ளிப் போகிறதா ? | நம்ம ஊரு கலரே மாநிறம் தானே : ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில் | குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு? | வள்ளியின் வேலன் தொடரில் கவர்னர் வேடத்தில் இனியா | கேன்சரா... : வதந்திக்கு மம்முட்டி தரப்பு மறுப்பு | ஓடிடியில் வெளியாகும் காமெடி வெப் தொடர் | கார் ரேஸ் பயிற்சியில் சோபிதா துலிபாலா | தேசிய விருது இருக்க, ஆஸ்கர் எதற்கு?: வைரலாகும் கங்கனாவின் பதிவு | தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகர், பாலிவுட் நடிகை | தைரியம் இருந்தா மேடைக்கு வா, நான் யாருன்னு காட்டுறேன்: அனுசுயா கோபம் |
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்து வரும் மலையாள நடிகர் மம்முட்டி கடைசியாக கவுதம் மேனன் இயக்கத்தில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி சுமாரான வெற்றி பெற்றது. இதையடுத்து மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்து வருகிறார் மம்முட்டி. இப்படத்தில் நயன்தாரா, பஹத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது.
இந்நிலையில் திடீரென்று நடிகர் மம்முட்டிக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அதன் காரணமாக அவர் நடிப்பிலிருந்து விலகி விட்டதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வந்தது. ஆனால் இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து மம்முட்டியின் பிஆர்ஓ அந்த செய்தியை மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மம்முட்டிக்கு புற்றுநோய் இருப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை. தற்போது ரம்ஜானுக்கு நோன்பு இருப்பதால் நடிப்பில் இருந்து விலகி இருக்கிறார். நோன்பு முடிந்ததும் மீண்டும் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.