இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிரபாஸ் தற்போது 'தி ராஜா சாப், பாஜி' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 'தி ராஜா சாப்' படத்தை மாருதி இயக்கி வருகிறார். மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 'பாஜி' படத்தை ஹனு ராகவுப்படி இயக்கி வருகிறார். இப்படத்தில் இமான்வி, ஜெயப்பிரதா, மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இவற்றை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'ஸ்பிரிட்' படத்தில் நடிக்க உள்ளார். நாயகியாக நடிக்க தீபிகா படுகோனே ஒப்பந்தமாகியுள்ளார். அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கும் எனத்தெரிகிறது. 2024ம் ஆண்டே 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு துவங்க இருந்தநிலையில் அப்போது முதலில் தீபிகாவிடம் தான் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தினர். அச்சமயத்தில் குழந்தைக்கு தாயாக இருந்ததால் நடிக்க முடியாது எனக் கூறிவிட்டார். ஆனால் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் தற்போது மீண்டும் தீபிகாவிடம் பேசிய ஒப்பந்தம் செய்துள்ளனர். இருவரும் கடந்தாண்டு வெளிவந்த 'கல்கி' படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.