பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி | பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் | ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் |

சமீபகாலமாகவே நடிகர் மம்முட்டி ஹீரோயிச கதைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் தரும் விதமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி நண்பகல் நேரத்து மயக்கம், காதல் ; தி கோர், புழு, பிரம்மயுகம் என தொடர்ந்து அவரது படங்கள் நடிப்பிற்காக பேசப்பட்டு வருவதுடன் அவரது இன்னொரு வித்தியாசமான நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்தி வருகின்றன. குறிப்பாக நெகட்டிவ் சாயல் கொண்ட கதாபாத்திரங்களை மம்முட்டி தற்போது அதிகம் தேர்வு செய்கிறார்,
அந்தவகையில் புழு, பிரம்மயுகம் படங்களை தொடர்ந்து கலம் காவல் என்கிற படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. சொல்லப்போனால் வில்லன் நடிகரான விநாயகன் தான் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். மம்முட்டி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஜிதின் கே ஜோஸ் என்பவர் இயக்குகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதிலும் மம்முட்டியின் வில்லத்தனம் கலந்த பார்வையும் சிரிப்பும் நிச்சயமாக இந்த படத்தில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது.