குஷ்புவை தொடர்ந்து கணவர் சுந்தர் சியும் அரசியலில் களமிறக்கம் : மதுரை மத்தியில் போட்டி | ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் டிரைலர் ; ஸ்படைர்மேன் : பிராண்ட் நியூ டே | 'காந்தாரா' கதாநாயகியை 'அன்பாலோ' செய்த ரிஷப் ஷெட்டி | ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்? | சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானி | ராம் சரணின் 41வது பிறந்தநாளில் 10 லட்சம் நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி | அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்கிறார் ரெஜினா | நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. |

கடந்த 2022-ல் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருந்தார். இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக காந்தாரா சாப்டர் 1 என்கிற டைட்டிலுடன் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன்பு துவங்கினார்கள்.
தற்போது கர்நாடகாவில் உள்ள கொல்லூரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கேரளாவை சேர்ந்த கபில் என்கிற துணை நடிகர் இதில் கலந்துகொண்டு நடித்து வந்தார். தனக்கு காட்சி இல்லாத ஓய்வு நேரத்தில் அருகில் இருந்த கொல்லூர் சவுபர்ணிகா ஆற்றில் குளிப்பதற்காக சென்றவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையும், உள்ளூர் மக்களும் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அன்று மாலை அவரது உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது. இவரை தொடர்ந்து தற்காலிகமாக காந்தாரா படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக சில மாதங்களுக்கு முன்பும் காந்தாரா படப்பிடிப்பிற்காக ஒரு பேருந்தில் படக்குழுவினர் பயணம் செய்த போது விபத்துக்கு உள்ளான சம்பவமும் நடைபெற்றது. நல்ல வேளையாக அந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.