படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
கடந்த 2022-ல் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருந்தார். இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக காந்தாரா சாப்டர் 1 என்கிற டைட்டிலுடன் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன்பு துவங்கினார்கள்.
தற்போது கர்நாடகாவில் உள்ள கொல்லூரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கேரளாவை சேர்ந்த கபில் என்கிற துணை நடிகர் இதில் கலந்துகொண்டு நடித்து வந்தார். தனக்கு காட்சி இல்லாத ஓய்வு நேரத்தில் அருகில் இருந்த கொல்லூர் சவுபர்ணிகா ஆற்றில் குளிப்பதற்காக சென்றவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையும், உள்ளூர் மக்களும் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அன்று மாலை அவரது உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது. இவரை தொடர்ந்து தற்காலிகமாக காந்தாரா படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக சில மாதங்களுக்கு முன்பும் காந்தாரா படப்பிடிப்பிற்காக ஒரு பேருந்தில் படக்குழுவினர் பயணம் செய்த போது விபத்துக்கு உள்ளான சம்பவமும் நடைபெற்றது. நல்ல வேளையாக அந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.