சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட டீசர் நாளை மறுநாள் ரிலீஸ் | பேச்சுத்துணைக்காக சம்பளம் கொடுத்து சிங்கம்புலியை மலேசியா அழைத்துச் சென்ற அஜித் | மம்முட்டிக்கு ஒரு நியாயம், சாதாரண நடிகருக்கு ஒரு நியாயமா ? : முதல்வர் மீது நடிகர் குற்றச்சாட்டு | லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியான டிசி படத்தின் புதிய போஸ்டர் | ராஷ்மிகாவின் ஹாக்டெய்ல் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | 'ப்ரோ கிளப்' ஆக மாறும் 'ப்ரோ கோட்' ? | சிங்கப்பூர் சுற்றுலாவில் சிவகார்த்திகேயன் | நடிகர்களுக்கு, ஓடிடிக்கு கட்டுப்பாடு : சென்னை கூட்டு கூட்டத்தில் முக்கியமான முடிவு | 'காஞ்சனா' ரீரிலீஸ் : முதல் நாளில் 3 கோடி வசூல் | ஒரு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க 22 நாட்கள் |

ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்துள்ள படம் 'கொலைச்சேவல்'. அறிமுக இயக்குநர் வி.ஆர்.துதிவாணன் இயக்கியுள்ளார். கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர் இவர்களுடன் பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சாந்தன் இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் துதிவாணன் கூறும்போது “காதல் படமான இது, சமுதாயத்துக்குத் தேவையான ஒரு விஷயத்தைப் பேசுகிறது. எழுத்தாளர் இமையம் எழுதிய 'கொலைச்சேவல்' கதைக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பு இல்லை. இத்தலைப்பு படத்தின் கதைக்குப் பொருத்தமாக இருந்ததால், அவரிடம் அனுமதி வாங்கி பயன்படுத்தி இருக்கிறோம்” என்றார். படம் வருகிற 13ம் தேதி வெளியாகிறது.