2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மலையாள நடிகை ஐஸ்வர்ய லஷ்மி தமிழில் ஜகமே தந்திரம், ஆக்ஷன், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர். இப்போது முதல் முறையாக தமிழில் உருவாகும் புதிய வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். சதீஷ் ராஜா தர்மர் இயக்குகிறார். இந்த வெப் தொடருக்கு 'தீவினை போற்று' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 1990 காலகட்டத்தில் நடைபெறும் கதை களத்திற்கான அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பாரதிராஜா, சத்யராஜ் மற்றும் பாபு ஆண்டனி ஆகியோர் இணைந்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இந்த வெப் தொடரில் இன்னும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் விதார்த் மற்றும் கலையரசன் இருவரும் இணைந்துள்ளனராம். யாலி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த தொடர் சோனி லிவ் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.