ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழில் ‛நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்காஹ்' என சில படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நஸ்ரியா. அதன்பிறகு பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் உடன் திருமணம் முடிந்த பின்னர் நடிப்பிலிருந்து விலகி இருந்தார். அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த நஸ்ரியா தமிழ் சினிமாவில் மட்டும் நடிக்கவில்லை.
தற்போது பல வருடங்களுக்கு பிறகு தமிழில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகின்றார். ஆனால், இது படம் அல்ல வெப் தொடர். இந்த வெப் தொடரில் நஸ்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு நடிக்கிறார். இதனை டைரக்டர் ஏ.எல்.விஜய் தயாரிக்கிறார். சூர்யா பிரதாப் இயக்குகிறார் .
இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இப்போது கிடைத்த புதிய தகவலின் படி, 1940களின் பின்னனியில் இதன் கதைகளம் நடைபெறுகிறதாம். உண்மை கதையான லஷ்மிகாந்தன் கொலை வழக்கு கதையை பின்பற்றி இந்த தொடர் உருவாகிறது. இதில் தியாகராஜர் பாகவதர் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் நடித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். நஸ்ரியா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.