சினிமா மோகத்தால் சீரழியும் பெண்கள்.... எங்கே செல்லும் இந்த பாதை! | குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் |
மலையாள திரையுலகில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக பல நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் சில நடிகர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மலையாள நடிகையான சவுமியா என்பவர் தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னை செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார் என குற்றம் சாட்டி உள்ளார். நீலகுறுக்கன், அத்வைதம் போன்ற மலையாள படங்களில் நடித்தவர் நடிகை சவுமியா. தமிழிலும் ஒரு படத்தில் நடித்தார். ஓரிரு படங்களில் மட்டுமே நடித்த இவர் அதன்பின் சினிமாவை விட்டே விலகிவிட்டார்.
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது : ‛‛எனக்கு அப்போது 18 வயது. தமிழ் இயக்குனர் ஒருவர் அவரது மனைவியுடன் வந்து என் அப்பாவிடம் பேசி சினிமாவில் நடிக்க வைப்பதாக அழைத்து சென்றார். படத்தில் நடிக்கும் போது அந்த இயக்குனரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தேன். ஒருநாள் இயக்குனரின் மனைவி வீட்டில் இல்லாத சமயம் தன்னை மகள் போன்று நினைப்பதாக கூறி முத்தமிட்டார். அப்போதே எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. என்னுடன் குழந்தை பெற்றக் கொள்ள வேண்டும் என கூறினார். பின்னர் அவரால் நான் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். ஓராண்டு காலம் அந்த இயக்குனரின் செக்ஸ் அடிமையாக இருந்தேன். பயத்தால் இதை அப்போது என்னால் கூற முடியவில்லை. இந்த அவமான உணர்வில் இருந்து வெளியே வர எனக்கு 30 ஆண்டுகள் ஆனது'' என தெரிவித்தார். ஆனால் அந்த இயக்குனரின் பெயரை கூறவில்லை. போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளதாக கூறி உள்ளார்.