கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் |

தமிழில் ஏஸ், மதராஸி படங்களில் நடித்த ருக்மணி வசந்த், தற்போது திரைக்கு வந்துள்ள ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். இதையடுத்து யஷ் நடித்து வரும் டாக்ஸிக், என்டிஆரின் டிராகன் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛கிரஷ் என்று அழைக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் அதைப் பற்றி அதிகமாக யோசிக்கவில்லை. காரணம் அத்தகைய பாராட்டு தற்காலிகமானது என்று நம்புகிறேன். காலப் போக்கில் அது மாறிவிடுகிறது. ஆனால் நான் ஒரு விஷயத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பலர் இன்னும் என்னை பிரியா என்று அழைக்கிறார்கள். கன்னடத்தில், சப்தா சாகர தாட்சே எல்லோவில் நான் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் அது. அந்த வேடத்தில் நடிக்கும் போது ரொம்பவே பயந்தேன். ஆனால் அந்த எளிமையான கதாபாத்திரத்தை ரசிகர்கள் ரசிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியிருக்கும் ருக்மணி வசந்த், எதிர்காலத்தில் காதல், நகைச்சுவை கலந்த கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.




