பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

‛மருதம்' படத்தில் விதார்த் ஜோடியாக நடிப்பவர் ரக்ஷனா. விவசாயிகள் கஷ்டம், அவர்களின் கடன் பிரச்னை, நில பிரச்னைகளை கதை பேசுகிறது. ராணிப்பேட்டையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. திரைப்படக் கல்லுாரியில் படித்தவரும், மோகன்ராஜா, சாட்டை அன்பழகன் குழுவில் பணியாற்றிவருமான வி.கஜேந்திரன் இயக்கி உள்ளார்.
சென்னையில் நடந்த இந்த பட விழாவில் பேசிய விதார்த், 'அம்மாவாக நடிக்க பல ஹீரோயின்கள் தயங்குவார்கள். ரக்ஷனா தைரியமாக ஒப்புக்கொண்டார். சம்மர் காலத்தில் வேலுார் சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பு நடந்தது. கேரவன் கிடையாது. படக்குழு ரொம்பவே கஷ்டப்பட்டோம்'' என்றார்.
ஹீரோயின் பேசுகையில், ‛‛விதார்த்தை சீனியர் ஹீரோ என்றார்கள். மற்றவர்கள் அதை குறிப்பிட்டு கலாய்க்க, நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, நடிப்பில் எனக்கு சீனியர். அவருக்கு 30 வயதுதான் இருக்கும்'' என்று சமாளித்தார்.
அக்டோபர் 10ல் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தவிர, சாட்டை அன்பழகன் இயக்கும் படம், 2 வெப்சீரிஸ், இன்னொரு படத்திலும் விதார்த் நடிக்கிறாராம்.




