மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
2015ல் தமிழில் ‛சதுரன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. அதன் பிறகு சசிகுமார் நடித்த ‛வெற்றிவேல்' படம் மூலமாக ரசிகர்களிடம் பிரபலமான இவர், கூடுதலாக நடிகை நஸ்ரியாவின் சாயலில் இருந்ததால் ரசிகர்களை எழுத்தில் கவர்ந்தார். தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மாறி மாறி நடித்து வந்தார். குறிப்பாக கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் முதன்முறையாக கன்னடத்தில் உருவாக இருக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் வர்ஷா. பி.சி சேகர் என்பவர் இயக்கத்தில் உருவாகும் 'மஹான்' எனும் கன்னடப் படத்தில் தான் அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் வர்ஷா பொல்லம்மாவின் சொந்த ஊரே கர்நாடக மாநிலம் தான். இத்தனை வருடங்களாக அங்கே அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் 10 வருடங்கள் கழித்து தனக்கு முதன்முதலாக தனது தாய் மொழியில் வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறும்போது, “ஏன் என்னுடைய தாய்மொழியில் எனக்கு ஒரு படம் கூட தேடி வரவில்லை என எப்போதுமே நான் ஆச்சரியப்பட்டு உள்ளேன். அந்த சமயத்தில் நான் நல்ல வலுவான கதாபாத்திரங்களை மற்ற மொழிகளில் நடித்து வந்தேன். ஆனாலும் கூட கன்னடத்தில் ஒரு சில நிமிடங்கள் வந்து போகும் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. அப்படி காத்திருந்தாலும் கூட இதோ 10 வருடம் கழித்து வலுவாக கதாபாத்திரத்துடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளேன். காரில் போகும்போது எப்போதுமே கன்னட பாடல்களை விரும்பி கேட்கும் நான், என்னுடைய கன்னட பட பாடல்களும் இப்படி காரில் கேட்டுக்கொண்டே பயணிக்க வேண்டும் என ரகசியமாக பிரார்த்தனை செய்தேன்.. அது பலித்து விட்டது” என்று கூறியுள்ளார்.