'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் நடிகர் கலையரசன் மெட்ராஸ் படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன்பிறகு அதே கண்கள், குதிரைவால், ஹாட் ஸ்பாட், ராஜா மந்திரி உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்துள்ளார். இது அல்லாமல் சார்பட்டா பரம்பரை, கபாலி, ஜகமே தந்திரம், வாழை, தேவரா உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இதில் பெரும்பாலான படங்களில் அவர் கதாபாத்திரம் இறந்து போகும் கதாபாத்திரமாக உள்ளதால் சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்கள் கலையரசன் கதாபாத்திரம் வந்தாலே இறந்து விடும் என மீம்ஸ் உருவாக்கி கலாய்த்தனர்.
இந்த நிலையில் மெட்ஸ்காரன் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட கலையரசன் மேடையில் கூறுகையில், "ஒரு படத்தின் கதையை உருவாக்கி எழுதி வரும் போதே ஒரு கதாபாத்திரம் சாக போகிறதென்றால் என் பெயரை எழுதி விடுவார்கள் போல, இனி நான் இரண்டாம் கட்ட நாயகனாக நடிக்க மாட்டேன். முதன்மை கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன்" என்றார்.