அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

கடந்த 2022-ல் மம்முட்டி பார்வதி முதன்முறையாக இணைந்து நடித்த புழு என்கிற திரைப்படம் மலையாளத்தில் வெளியானது. பெண் இயக்குனரான ரதீனா என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆணவக் கொலையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. மம்முட்டி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனாலேயே இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ரதீனா தனது கணவரிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று விட்டதாக தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பலரும் நேற்று முதல் என்னை நீங்கள் விவாகரத்து பெற்று விட்டீர்களாமே என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டு வருகிறார்கள். ஆமாம்.. அதிகாரப்பூர்வமாக நான் விவாகரத்து பெற்று விட்டேன்.. அதன் சான்றிதழ்கள் என்னுடைய வழக்கறிஞர் சாந்தியிடம் இருக்கிறது.. வேண்டுமென்றால் அதையும் வாங்கி உங்களுக்காக பதிவிடுகிறேன்.. போதுமா..? ஏன் யாரேனும் என்னை மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் இருக்கிறீர்களா ? சாரி.. எனக்கு அதில் ஆர்வம் இல்லை” என்று கொஞ்சம் நக்கலுடன் பதிவிட்டுள்ளார் ரதீனா.
சில வருடங்களுக்கு முன்பு சர்ஷாத் பணியன்டி என்பவருடன் ரதீனாவுக்கு திருமணம் நடைபெற்றது. புழு திரைப்படம் வெளியான பின்பு சில நாட்கள் கழித்து ஆணவக்கொலை சம்பந்தப்பட்ட இந்த படத்தில் மம்முட்டி எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார். அவர் ஒருவேளை இந்த கதையை கேட்டாரா இல்லையா., இந்த கதையில் நடித்ததன் மூலம் உயர் சாதியை சேர்ந்தவர்கள் மோசமானவர்கள் என்று மம்முட்டி சொல்லி இருக்கிறாரா என்பது போன்று கேள்விகளை எழுப்பி சர்ச்சையை கிளப்பியவர் தான் இவர். அப்போது இருந்தே கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது இந்த விவாகரத்து அதை உறுதி செய்துள்ளது.